கேரளா, அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்களிப்பதற்கு முன்பு வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக பல்வேறு வழிமுறைகள் உள்ளன. நேஷனல் வோட்டர்ஸ் சர்வீஸ் போர்ட்டல் (NVSP) வழியாக ஆன்லைனில் பெயரைச் சரிபார்க்கலாம். வாக்காளர் அடையாள அட்டை எண், மொபைல் எண் அல்லது பெயர் மூலம் தேடலாம். 'வோட்டர் ஹெல்ப்லைன்' மொபைல் ஆப்பையும் பயன்படுத்தலாம். வாக்குச்சாவடிக்கு செல்லும் முன் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம் போன்ற அடையாள ஆவணங்களைக் கொண்டு செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் வாக்காளர்களை ஆரம்ப நேரத்திலேயே வந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பான முறையில் வாக்களிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.