நொய்டாவில் ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் வன்முறை ஆர்ப்பாட்டம்
உத்தரபிரதேசத்தின் நொய்டா நகரில் ஊதிய உயர்வு கோரி நடத்தப்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் இன்று வன்முறையில் முடிந்தது. பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது சூழ்நிலை கட்டுப்பாட்டை இழந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசார் மீது கல்லெறிந்தனர். அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் சேதமடைந்தன. கண்ணாடி உடைப்பு மற்றும் சொத்து சேதங்கள் ஏற்பட்டதால் பகுதியில் பதற்றம் நிலவியது. சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீஸ் படையினர் அனுப்பப்பட்டு சூழ்நிையை கட்டுப்படுத்தினர். போலீசார் பல ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்தனர். மேலும் விசாரணைக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் நிறுவன நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சி செய்து வருகின்றனர்.