தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று துறைவாரியாக பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தார். தவெக ஆட்சி அமைந்ததும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதாக உறுதியளித்தார். மாநில அரசு ஊழியர்கள் நீண்டகாலமாக கோரிவரும் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறினார். நெசவாளர்களுக்கான சிறப்பு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதாகவும் விஜய் அறிவித்தார். பாரம்பரிய நெசவுத் தொழிலை மேம்படுத்த தனி அமைச்சகம் உருவாக்குவதாகவும், நெசவாளர்களின் வருமானத்தை அதிகரிக்க நவீன தொழில்நுட்பம் மற்றும் சந்தைப்படுத்தல் வசதிகளை வழங்குவதாகவும் கூறினார். விவசாயிகளுக்கான சிறப்பு பட்ஜெட் ஒதுக்கீடு, இலவச மின்சாரம், விவசாய கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகளையும் வெளியிட்டார். அனைத்து வாக்குறுதிகளையும் கால வரையறையுடன் நிறைவேற்றுவதாக உத்தரவாதம் அளித்தார். தமிழக மக்களின் நம்பிக்கைக்கு உரியவராக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.