சட்டசபைத் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என திருமாவளவன் அறிவிப்பு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் இன்று முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் தான் போட்டியிடமாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் இந்த அறிவிபை வெளியிட்டார். கட்சியின் இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிப்பதே இந்த முடிவுக்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கட்சியின் தேர்தல் வேலைகளை முழுமையாக மேற்பார்வையிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இருக்கும் விசிகவின் இந்த முடிவு அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விவாதங்களுக்கு வழி வகுத்துள்ளது. திருமாவளவனின் இந்த நடவடிக்கை கட்சியின் எதிர்கால மூலோபாயத்தில் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அரசியல் ஆய்வாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.