நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் கடந்த சில நாட்களாக விசில் போன்ற அசாதாரண சத்தம் கேட்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். முக்கியமாக இரவு நேரங்களில் இந்த சத்தம் அதிகமாக கேட்கும் என்று பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தெரிவித்துள்ளன. இந்த விசில் சத்தம் சில நிமிடங்களுக்கு தொடர்ந்து கேட்டு பின்னர் நின்று விடும் என்றும், இது வீட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருவதாகவும் குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர். சில குடும்பங்களில் குழந்தைகள் பயந்து போவதால் இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த புகார்களைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு உருவாக்கப்பட்டு காரணம் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சாக்கடை பைப்லைன்கள், காற்று வென்டிலேஷன் அமைப்புகள் ஆகியவை சோதனை செய்யப்படும் என்று அதிாரிகள் அறிவித்துள்ளனர்.