கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அரசுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை கடுமையாக பாதிக்கும் என்று எச்சரித்துள்ளார். சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீட்டு முறை, தனியார்மயமானால் முற்றிலும் பாதிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் அனைத்து சமூகத்தினருக்கும், குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார். ஆனால் தனியார் நிறுவனங்களில் இந்த இடஒதுக்கீடு முறை சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

மத்திய அரசின் தனியார்மயமா கொள்கையை கடுமையாக விமர்சித்த பினராயி விஜயன், இது நாட்டின் பொருளாதாரத்தில் அரசின் கட்டுப்பாட்டை குறைத்து தனியார் நிறுவனங்களுக்கு அதிக அதிகாரம் வழங்குவதாக கூறினார். இதனால் சமூக நீதி மற்றும் சம வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

பொதுத்துறை நிறுவனங்களை பலப்படுத்துவதே நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் என்றும், தனியார்மயமானால் வேலையின்மை அதிகரிக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அரசு வேலைகளில் இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்பு உரிமை என்பதையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.