துபாய் சர்வதேச விமான நிலையத்தில் திங்கட்கிழமை ஈரானின் ட்ரோன் தாக்குதலால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களின் ஒரு பகுதியாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. சிவில் டிஃபென்ஸ் படையினர் உடனடியாக சம்பவ இடத்தை அடைந்து தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டனர். அவர்களின் விரைவான நடவடிக்கையால் எரிபொருள் தொட்டியில் தீ பரவுவது தடுக்கப்பட்டது.

தீ விபத்தின் போது அடர்ந்த புகையும் பெரும் தீ சுவாலையும் எழுந்தது. இதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விமான நிலைய அதிகாரிகள் பயணிகளின் பாதுகாப்பை முன்னிட்டு அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தி வைத்தனர்.

ஈரானின் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள் வளைகுடா பகுதியின் முக்கிய நகரங்களை அச்சுறுத்தி வருவதாக பிராந்திய வல்லரசுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல்கள் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்து வருவதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.