தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக இந்த மழை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மழையின் தீ்த்தை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறைந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் உயரமான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வானிலை நிபுணர்களின் கணிப்பின்படி அடுத்த 24 மணி நேரத்தில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.