ஹர்தீப் புரியின் மகள் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புபடுத்தும் உள்ளடக்கத்தை அகற்ற டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் புரியின் மகள் ஹிமாயானி புரி, தன்னை சர்ச்சைக்குரிய அமெரிக்க கோடீஸ்வர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புபடுத்தும் அவதூறு உள்ளடக்கத்தை அகற்றக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் ஹிமாயானி புரி ரூபாய் 10 கோடி இழப்பீடு கோரியுள்ளார். மேலும், தன்னைப் பற்றி அவதூறான உள்ளடக்கங்களை பரப்புவதைத் தடுக்க பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக தடை உத்தரவு வழங்கக் கோரியுள்ளார்.
ஜெஃப்ரி எப்ஸ்டீன் பாலியல் கடத்தல் மற்றும் சிறார் தொந்தரவு வழக்குகளில் குற்றவாளி என நிரூபணமான அமெரிக்க கோடீஸ்வரர் ஆவார். அவர் 2019ல் நியூயார்க் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சர்ச்சையான நபருடன் ஹிமாயானி புரியை தொடர்புபடுத்தும் உள்ளடக்கங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு அடுத்த வாரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக சட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுபோன்ற அவதூறு வழக்குகளில் சமூக ஊடகங்களின் பங்கு குறித்து மீண்டும் கவனம் திரும்பியுள்ளது.