ஐரோப்பா கண்டம் முழுவதும் விமான எரிபொருள் (ATF) கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. கோடைகால பயண மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் விமானப் பயணத்தை மேற்கொள்ளும் நேரத்தில், இந்த பற்றாக்குறை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது. தற்போதைய கையிருப்பு அளவில் வெறும் 6 வாரங்கள் மட்டுமே விமான சேவைகளை தொடர முடியும் என்று தொழில்துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்படலாம் என்றும், கோடிக்கணக்கான பயணிகள் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கவலை தெரிவிக்கப்படுகிறது. உலக அளவில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் சப்ளை செயின் பிரச்சினைகள் இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் அவசர நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், வரும் வாரங்களில் விமானப் போக்குவரத்து துறை முழுமையாக முடங்கிவிடும் அபாயம் உள்ளது.