தேர்தல் நடைபெற உள்ள மேற்கு வங்காளத்தில் தேர்தல் ஆணையம் முக்கிய நிர்வாக நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலத்தின் முதன்மைச் செயலாளர் மற்றும் உள்துறைச் செயலாளர் ஆகியோரை பதவி நீக்கம் செய்துள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். புதிய பதவிகளில் சேர்ந்துள்ள இரு அதிகாரிகளும் மார்ச் 16ம் தேதி மதியம் 3 மணிக்குள் பதவியேற்று செயல்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தில் நடைபெற உள்ள தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தேர்தல் ஆணையத்தின் இந்த திடீர் முடிவு மேற்கு வங்காள அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.