திமுக தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராஜா இன்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மக்களின் வலுவான ஆதரவு கிடைத்துள்ளதாக அவர் கூறினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து பணியாற்றி வருவதாக அ.ராஜா தெரிவித்தார். மக்கள் நலன்களுக்கான கொள்கைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆளும் கட்சியின் செயல்பாடுகள் மீதான மக்களின் அதிருப்தியும் கூட்டணியின் வெற்றிக்கு வழிவகுக்கும் என அ.ராஜா தெரிவித்தார். தமிழக அரசியலில் மாற்றம் தேவை என்பதை மக்கள் உணர்ந்துள்ளதாக அவர் நம்பிக்கை வெளியிட்டார்.